சனி, 30 ஜூன், 2018

வாழ்வின் பொருள்




எழுந்திடும் சூரியனின்
     முதல் ஒளிக்கீற்று தான் பட்டு
உடைந்த கண்ணாடி துண்டொண்டு
     ஒளிர்ந்தே இருள் ஒளிந்தது போல்
என் இருள் இதயக் கூட்டினுள்
     பொருள் இல்லா வாழ்வு கனக்கையில்
உன் சுவை தேர் பேரன்பின்
     சுடரொளி தான் புதுவாழ்வு படைக்கின்றது.
பெருகி எழுந்து சிந்திடும் அப்பேரொளியில்
     பெருந்துன்பமும் சுகமன்றோ?
என்னில் சிந்திய இப்பேரன்புத் துளிகள்
     எல்லைகள் தகர்க்கும் பெருங்கடலாய்ப்
பெருகி எனை முழுதும் கரைத்தே
     தனக்குள் சேர்த்துக் கொள்ளாதோ?
எல்லையில்லா ஆனந்த பரம்பொருளே!
     உனில் நிறைவதே என் வாழ்வின் அரும்பொருளே!

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...