
பூங்காவனச் சோலையிது!
பொன்னழகு பூமியிது!
நானும் இங்கே
மனிதனாய் பிறந்தேன்.
வறுமை சேற்றினிலே
ஏனோ விழுந்தேன்?
பசியோடு தூக்கமே
வாடிக்கை யானது;
உணவுக்காய் ஏக்கமே
லட்சியமாய் போனது..
கண்களில் தோன்றிடும்
உணவு கூட
என் கரம் சேருமா?
விழியோடு மரையுமா?
என்றே ஏங்குகிறது
எளியனின் நெஞ்சம்.
ஒரு வேளை சோரில்லாமல்
ஓராயிரம் நாட்கள்;
கலங்கிய நெஞ்சங்களே
எங்கள் உறவுகள்.
அடிமை நிலை மாற்றிட
யார் இங்கு வருவார்?
சமத்துவம் போற்றிட
யார் இங்கு உழைப்பார்?
நல்லுலகம் மலர்ந்திட
எங்கள் வாழ்வு செழித்திட
இறைவனின் கருணை தான்
எங்கள் இல்லம் திரும்புமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக