ஞாயிறு, 1 மே, 2011
இன்றே இறக்க வேண்டும்
இன்றே நான் இறக்க வேண்டும்.
பறவையெனப் பிறக்க வேண்டும்.
நாடு மொழி கண்டம் யென்று
மனிதனிட்ட யெல்லை தாண்டி,
வான மேகங்களை கிழித்தே நானும்
தரணி யெங்கும் உலாவ வேண்டும்.
சில்வண்டின் வாழ்நாள் போதும்
எனினும் சிக்கனமின்றி மகிழ வேண்டும்.
மெல்லிய மலர்களின்
நறுமணம் பேசிடும்
அடர்ந்தக் காட்டுக்குள்
கூடொன்று வேண்டும்
என்னாளும் அயராமல்
கூயிலின் தேன் குரல் கொண்டு
இயற்கை அன்னைக்கு வெண்பா பாடும்
நல் பரவசமும் வேண்டும்.
நாளை ஒன்று வேண்டும் என்று
ஆவல் எதும் இல்லாமல்
இன்றைய வாழ்வை இன்றே நானும்
முழுமையாய் ரசித்திட வேண்டும்.
சிறிதேனும் பிறருக்கு
பயனாக வேண்டும்.
அதனை விளம்பரம் செய்யாமல்
அமைதியாய் அழிந்திட வேண்டும்.
இறந்த பின் யாரும் என்னை
நினைக்கவும் வேண்டாம்.
என் காலம் தொலைந்த பின்
ஒரு கணமும் என்னை நினைத்து
தங்கள் வாழ்நாளின் சிறு துளியும்
ஒரு போதும் இழக்கவும் வேண்டாம்.
மகிழ்ந்தே இறந்தான் யென
மகிழ்ந்தால் போதும்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வாழியவே
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
புத்தாடை உடுத்தி நிற்கும் அந்தி மாலை மேகமே! உன் தோழி பூமி தேவதை சிவந்த ஆடை பூண்டதாலா நீயும் சிவந்த மேனி கொண்டு உன் நட்பைக் காட்டுகிறாய்?...
-
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
-
எழுந்திடும் சூரியனின் முதல் ஒளிக்கீற்று தான் பட்டு உடைந்த கண்ணாடி துண்டொண்டு ஒளிர்ந்தே இருள் ஒளிந்தது போல் என் இருள் இதயக் கூ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக